ஸ்ரீ சண்முக தீர்த்தப் பிரதிஷ்டை 2017
ஶ்ரீசண்முக தீர்த்தகேணி உருவான வரலாறு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருப்பணிகள் இடம்பெறுவதை ஆலயம் பிரபலப்படுத்துவதில்லை விளம்பரபடுத்துவதுமில்லை. ஆனால் பக்தர்களின் கண் முன்பாகவே ஆலய திருப்பணிவேலைகள் இடம்பெறுவது வழக்கம்.
இவ்வாறான அறிவித்தல்களை நல்லூரின் காரியலாயத்தின் முன்பு உள்ள ஆலய அறிவித்தல் பலகையில் எழுத்து மூலமாக ஆலயத்திற்கு வரும் பக்தர்களிற்கு அறிவிப்பது தான் வழக்கம்.
அவ்வாறிருக்க ஆலய கரும்பலகையில் எழுதிய "ஶ்ரீ சண்முக தீர்த்த பிரதிஷ்டை" பற்றி நாம் மேற்கொண்ட ஒரு தேடலின் விடை இதோ.
[1917ம் ஆண்டு] நல்லூர் சிறிய கோவிலாக இருந்த காலம்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு தீர்த்த கேணி ஒன்று உருவாக்கும் எண்ணத்தை அப்போதைய ஆலயத்தின் எட்டாவது அதிகாரியான 4வது இரகுநாத மாப்பாண முதலியாரின் மனதில் விதைத்தார் எம்பெருமான்.
அதன் தொடர்ச்சியாக 1922,1923ம் வருடங்களில் உலகில் மிக அரிதாக அமையப்பெறும் சற்சதுர வடிவிலான அழகிய திருக்கேணி அலங்காரகந்தபெருமானுக்கு உருவாகியது.
கேணி உருவாகிய காலத்தில் இருந்த தொழில்நுட்பத்திற்கு அமைய சுண்ணாம்புகற்களாலும் வெண்கற்காலும் இக்கேணி அமையப்பெற்று இன்று வரை பாதுகக்கப்பட்டு வந்தது.
1964ம் ஆண்டு ஆலயத்தை பொறுப்பேற்ற ஆலயத்தின் பத்தாவது அதிகாரியான குமாரதாஸ மாப்பாண முதலியார் தான் பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகையான திருப்பணிகள் முன்னேடுத்து ஆலயத்தை ஒரு பிரமாண்ட வளர்ச்சி பாதையில் இட்டுசென்றவர். 30 வருட பேராட்ட காலத்தில் கூட வளர்ச்சி பாதை கந்தனருளுடன் உருவாக்கியவர்.
அண்மையில் அடுத்தடுத்து இரு கோபுரங்களிற்கு அடுத்த திருப்பணியாக ஶ்ரீசண்முக தீர்த்தகேணி திருப்பணி செய்ய வேண்டும் கந்தசுவாமியார் கட்டளை இட்டார். இது காலத்தின் கட்டாயமும் கூட சுண்ணாம்பு கட்டு வேலைகளை இனி மேல் பராமரிப்பது எனின் பராமரிப்பு செலவு அதிகரித்தே செல்லும். எனவே சுண்ணாம்பு மற்றும் வெண்கற்களினால் ஆன இந்த கேணியை தொடர்ந்து பரமரிக்க முடியததால் (அதாவது சுண்ணாம்பின் உறுதித்தன்மை காலம் மிகக்குறைவு) குபேர கோபுரக் கும்பாவிஷேகம் முடிந்த நாளில் இருந்து கடந்த இரு வருடங்களாக நவீன முறையில் ஆலய வேலையாட்களை மட்டும் வைத்து மிக நுனுக்கமாக முறையில் உருவாக்கப்பட்டு . ஆலயத்தின் எதிர்காலத்திற்கு மிகப்பொருத்தமான நீண்ட காலம் உபயோகப்படுத்த கூடிய கடப்பாற்கற்களினால் வேயப்பட்டு "மிக அழகிய சண்முக தீர்த்தகேணிக்கான புனராவர்த்தன திருப்பணி" நிறைவுற்றுள்ளது.
இவ் ஶ்ரீசண்முக தீர்த்தகேணிக்கான பிரதிஷ்டா கும்பாபிஷேகம் எதிர்வரும் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15/08/2017 செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழமையாக ஶ்ரீ கந்தவேல் பெருமானே எந்த நிகழ்வையும் தொடக்கி வைப்பது வழமை. அது போன்று இந்த பிரதிஷ்டா நிகழ்வினையும் ஶ்ரீ கந்தவேல் பெருமானே கார்த்திகை உற்சவதினத் தன்று காலை தொடக்கி வைப்பார். காண்பதற்கு அரிய பல நிகழ்வுகள் ஶ்ரீசண்முக தீர்த்தகேணிக்கான பிரதிஷ்டா கும்பாபிஷேக நிகழ்வில் கண்டுகொள்ளலாம்
பெரும் வளர்ச்சி கண்டுவரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஶ்ரீ சண்முகதீர்த்தகேணி உருவாக்குவதற்கு 4வது இரகுநாதமாப்பாணருக்கு எண்ணம் உருவாகியதில் இருந்து நூறாவது (100) வருடமாகிய இவ்வருடம் ஷண்முக கேணிக்கான தீர்த்த பிரதிஷ்டை இடம்பெறுவது ஒரு சிறப்பான விடயமாகும்...
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...