Nallur 2019 Festival day 1 pm

துவஜாரோகண உற்சவம் மாலைநேர திருவிழா கொடியேற்ற நிகழ்வின் மாலை நேர உற்சவம் ஆனது மிகவும் முக்கியம் ஆன நிகழ்வு ஆகும் இவ்வேளையில் தான் ஶ்ரீ கந்தவேள் பெருமானுக்கு மகோற்சவத்தில் முதலாவது கால யாக தரிசனம் இடம் பெறும் நல்லூர் மகோற்சவ காலத்திலே ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும். துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) மூலமூர்த்திக்குரிய ஸ்நபன கும்பங்கள் வைக்கப் பெற்றிருக்கும். வேதிகையின் மேற்குப் புறத்தில் ஓமகுண்டம் இருக்கும். நான்கு திக்குகளிலும் யாக வாசல்கள் பரிவார கும்பங்கள், யாகேஸ்வரன், யாகேஸ்வரி கும்பங்கள் புண்ணியாஹ கும்பம் முதலியன அமைந்திருக்கும். இப்படிப்பட்ட யாக சாலையை இருபத்து ஐந்து தினங்களும் காலை மாலை என நாற்பத்தி எட்டு காலம் யாகபூஜை இடம்பெற்று எம்பெருமானுக்கு யாக தரிசனம் நடைபெறும்.துவஜாரோகண உற்சவம் மாலைநேர திருவிழா கொடியேற்ற நிகழ்வின் மாலை நேர உற்சவம் ஆனது மிகவும் முக்கியம் ஆன நிகழ்வு ஆகும் இவ்வேளையில் தான் ஶ்ரீ கந்தவேள் பெருமானுக்கு மகோற்சவத்தில் முதலாவது கால யாக தரிசனம் இடம் பெறும் நல்லூர் மகோற்சவ காலத்திலே ஈசான திக்கிலே மேற்கு வாசலாக யாக மண்டபம் அமைந்திருக்கும். துவஜாரோகணத்தன்று இங்கு யாக பூஜை ஆரம்பமாகும். தீர்த்தத் திருநாளன்று பகல் யாகபூஜை நிறைவு பெறும். துவஜாரோகணத்துக்கு முதல்நாளிரவே இங்கு வாயு மூலையில் சந்திரகும்பம் ஸ்தாபித்து அங்குரார்பணம் நிகழ்த்தப் பெற்றிருக்கும். யாக மண்டபத்தின் மத்தியிலே அமைந்த வேதிகயில் (மேடையில்) மூலமூர்த்திக்குரிய ஸ்நபன கும்பங்கள் வைக்கப் பெற்றிருக்கும். வேதிகையின் மேற்குப் புறத்தில் ஓமகுண்டம் இருக்கும். நான்கு திக்குகளிலும் யாக வாசல்கள் பரிவார கும்பங்கள், யாகேஸ்வரன், யாகேஸ்வரி கும்பங்கள் புண்ணியாஹ கும்பம் முதலியன அமைந்திருக்கும். இப்படிப்பட்ட யாக சாலையை இருபத்து ஐந்து தினங்களும் காலை மாலை என நாற்பத்தி எட்டு காலம் யாகபூஜை இடம்பெற்று எம்பெருமானுக்கு யாக தரிசனம் நடைபெறும்.