Articles

சாம்பிராணி,

சாம்பிராணி

 

ஃபிராங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரத்திலிருந்து வழியும் பால் போன்ற பசையை சரியான முறையில் பதப்படுத்தி கட்டிகளாக மாற்றினால் அதுவே  சாம்பிராணி ஆகும்.

உண்மையில் சாம்பிராணி என்பது மிக முக்கியமான அதிக நன்மைகள் மிகுந்த ஒரு மருத்துவப் பொருள். இதனை ஆங்கிலத்தில் 'ஃபிராங்கின்சென்ஸ்' என்றே அழைக்கிறார்கள். இதன் புகையை சுவாசித்தால் நுரையீரல்களில் உள்ள நச்சுகள் மாயமாக மறையும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

சாம்பிராணி மரமானது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் வளர்கிறது. இந்தியாவில் இம்மரம் பீகார் அஸ்ஸாம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் சேலம் அருகிலுள்ள சேர்வராயன் மலைப் பகுதியில் செழிப்பாக வளர்கிறது. 

சாம்பிராணியில் அனேக ரசாயன சங்கதிகள் இருப்பதால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்குப் பிறகு சாம்பிராணிப் புகை போட்டு தலைக்கேசத்தை ஆற வைப்பார்கள். குழந்தை ஈன்ற இளம் தாய்களுக்கு அருமருந்து இந்த சாம்பிராணி.   

நச்சுக் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட  இந்த சாம்பிராணி பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாப்பதை அலோபதி மருத்துவமும் ஒப்புக் கொண்டுள்ளது. 

 


Leave a Comment