எல்லாம் வல்ல எங்கள் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 2011 ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்சவத்தின் 18ம் திருவிழாவாகிய கார்த்திகைத் திருவிழா உலகமே எதிர்பார்க்கும் யாழ் வரலாற்றில் தடம்பதிக்கும் சிறப்புமிகு உற்சவமாக நிகழ இருக்கிறது.
ஆம். கேட்டோரிக்கு கேட்ட வரம் அள்ளி வழங்கி நல்லூரில் நல்லாட்சி நடத்தி வரும் எங்கள் நல்லூர் கந்தவேல் பெருமானிற்கு நல்லதோர் உற்சவம். கார்திகைப் பெண்களின் கைகளில் தவழ்ந்த கார்த்திகைக் குமரானாம் கந்தன் பிறந்த கார்த்திகை நட்சத்திரத்தில் (21.08.2011) “அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன நவதள ஸ்ரீ சண்முக ராஐகோபுரம் ஸ்ரீ சண்முகப்பெருமான் ஸ்வர்ண வாசல் தரிசனம் நவகலசாபிஷேகம்” நிகழ உள்ளது. இது 21.08.2011 அன்று காலை 6.00 மணிக்கு அதி சிறப்புமிகு வசந்தமண்டப பூசையூடன் ஆரம்பமாகும்.
இதற்கு முன்பதாக 19.08.2011 இன்று காலை 6.00 மணி முதல் ஸ்ரீ சண்முகப் பெருமான் இருப்பிடத்திற்கு முன் விசேட யாகபூசை மற்றும் சிறப்புக் கிரிகைகள் இடம்பெறுகிறது. 19.08.2011 இன்று மாலை 5.45 மணிக்கு ஸ்ரீ சண்முகப் பெருமான் இருப்பிடத்திற்கு முன் விசேட யாகபூசை மற்றும் சிறப்புக் கிரிகைகள் இடம்பெறும். .நாளையும் 20.08.2011 காலை 6.00 மணிக்கும் மாலை 5.45 இவ்வாறு விசேட யாகபூசை மற்றும் சிறப்புக் கிரிகைகள் இடம்பெறும்.
கேபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பது முன்னோர் வாக்கு. யாழ்குடா நாட்டிலேயே மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன நவதள ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்தின் ஸ்வர்ண வாசல் திறக்கப்பட்டு தொடர்ந்து ஸ்வர்ண வாசல் தரிசனம் இடம்பெறும்.
நவதளங்களைக் கொண்டு பார்போரை பிரமிக்க வைக்கும் இந்த ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்தின் நவகலசாபிஷேகத்தில் முருகனடியார்கள் அனைவரும் கலந்து கண்ணிற்கு அருமருந்தாகிய “அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன நவதள ஸ்ரீ சண்முக ராஐகோபுரம் ஸ்ரீ சண்முகப்பெருமான் ஸ்வர்ண வாசல் தரிசனம் நவகலசாபிஷேகம்” கண்டு ஸ்ரீ சண்முகப்பெருமானின் நல்லருள் பெற்றிட இச் செய்தியை அனைவருக்கும் அறிவிக்கிறோம்.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்காட்சிகளை நேரடியாக வந்து காண முடியாத முருகனடியார்கள் அனைவருக்கும் பல முருகனடியார்கள் ஆதரவூடன் நல்லூரான் இணையம் வெளியிட முழு முயற்சி செய்கிறது. எம்மால் இயன்றவரை நல்லைக் கந்தனின் நல்லாசி அனைவருக்கும் கிடைத்திட நல்லூரான் இணையம் தொடர்ந்தும் முயற்சிக்கும். இதேபோல் நல்லூரான் இணையம் சிறப்புடன் தொடர்ந்து செயற்பட கந்தனின் நல்லாசி நல்லூரான் இணையத்திற்கும் கிடைத்திட அனைவரும் நல்லூர் கந்தனை வேண்டுவோமாக.
இதுவரை காலமாக நல்லூர் கந்தசுவாமி கோயிலின் கட்டுப்பாடுகளை மீறாது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாகத்தை அனுசரித்து இயங்கி வரும் இணையம் எமது நல்லூரான் இணையம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக நல்லூர் கந்தசுவாமி கோயிலின் அனுமதியுடன் இது வரை காலம் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்த நல்லூர் ஆலயத்தின் உட்பகுதியின் சில அரிய புகைப்படங்களை நல்லூரான் இணையத்திலும் பிரசுரிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளதால் இவற்றை இணையத்தில் பிரசுரிக்க Nalluran Web Team தீர்மாணித்துள்ளது. இவை இத்திருவிழாவின் இறுதியில் வெளியிடப்படும்.
அன்புடன்,
Nalluran Web Team
மிகவும் சந்தோஷமான செய்தியைச் சொன்னதற்கு மிகவும் நன்றிகள். அந்த அரிய புகைப்படங்களை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் நல்லூரான் இணையத்தளத்தை யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமிக் கோயிலின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகக் கூட செயற்படக்கூடிய தகுதிகள் அனைத்தயும் கொண்டிருக்கின்றது.
புதிய இராஜகோபுர கும்பாபிஷேகக் காட்சிகளையும், யாகபூசையில் சொல்லப்படும் வேதபாராயணங்களையும் முழுமையாகக் கேட்பதற்கும் பார்ப்பதற்கு மிகவும் விருப்புடன் காத்திருக்கின்றோம்.
இத்தனை எம் வேண்டுகோள்களை நனவாக்கிய உங்களிடம் இன்னுமொரு சிறிய தாழ்மையான வேண்டுகோள். உங்கள் வீடியோக்காட்சிகளில் மகோற்சவக்காலங்களிலும் ஏனைய விசேட தினங்களிலும் வசந்தமண்டபப்பூசையிலும், யாகபூசையிலும், ஏனைய பூசைகளிலும் சொல்லப்படும் வேதபாராயணங்கள் அனைத்தையும் முழுமையாக தினமும் சேர்த்துக் கொள்ளும்படி பணிவாக அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். எம்மைப் போன்றவர்களுக்கு இவற்றை பார்த்தும் கேட்டும் பரவசமடையும் பாக்கியத்தைத் தருமாறும் வேண்டி நிற்கிறோம்.
excellent news. look forward to retrieving the latest pictures, video and other clips from your website. well done and congratulations to you and your team. keep up your in-valuable contribution and your professionalism. kumaran’s family from london
Nalluran thiruvadiya naan ninaitha mathirathill eellam marapenadi kiliye enkira yogar vakitku inagan nalluran .com moolam ellam paarkaa kithaitha punyam ungaluku kidaikka
ellam valla nalluran patham panikiren
இயன்ற வரை முருகனருளுடன்எல்லாவற்றையும் முழுமையாக தரமுயற்சிக்கிறோம்.
நல்லூரின் படங்கள், இளவயதில் என்னுடைய அம்மம்மாவுடன் நல்லூர்க் கோயிலுக்குப் போனதை மீண்டும் நினைவூட்டுகிறது. நன்றி. ஆனால் தமிழ், தமிழ் என்று பீற்றிக்கொள்ளும் ஈழத்தமிழர்களாகிய எங்களின் கோயில்களில் அதுவும் தமிழ்க்கடவுளான முருகனின் கோயிலிலேயே தமிழுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பதைப் பார்க்கும் போது தான் வருத்தமாகவும், எங்களின் பம்மாத்தும் வெளிப்படுகிறது.
நல்லூரின் கட்டியத்தையாவது, தமிழ்க்கடவுள் முருகனுக்குத் தமிழில் கூறினால் என்ன? அல்லது ஒரு திருப்புகழையாவது முருகன் புறப்படுமுன்னர் பாடலாம். ஈழத்தமிழர்களின் கோயிலிலேயே தமிழைக் காணவில்லை. இந்த ஆலயக் கோபுரத்தின் குடமுழுக்கு விளம்பரம் முழுவதும் சமக்கிருதம் கலந்த மணிப்பிரவாள (மலையாளம் போல்) நடையில் எழுதப்பட்டுள்ளது, அது தேவையா? அழகான தமிழில் எழுதியிருக்கலாம். என்னுடைய இந்தப் பதிவையும் வெளியிடுவீர்களென நம்புகிறேன்.
ஆறுமுகப்பெருமானின் ஒப்பற்ற எழில் மிகுந்த, உயர்ந்த,
ஒன்பது தளங்களையுடையஅழகிய தங்க
அரச கோபுர குடமுழுக்கு விழா.
ஆறுமுகப்பெருமானின் தங்க நிலைவாயில் காட்சி
ஒன்பது குடமுழுக்கு விழா.
21-08-2011 ஞாயிறு
கார்த்திகைத் திருவிழா
காலை 6.00 முதல்
(தமிழறிஞர்களின் உதவியுடன் இதை விட அழகியதமிழில் அந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்கலாம்.)
மிக்க நன்றி..!! தயவுசெய்து கும்பாபிஷேகம் முடிந்தவுடன் உடனடியாக படங்கள், விடியோக்கள் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.. நேரடியாக கும்பாபிஷேக நிகழ்வைக் காணமுடியுமா?? ஏதாவது நேரடி ஒளிபரப்புகள் இடம்பெறுவதற்கானா ஏற்பாடு நல்லைக் கந்தன் ஆலயசூழலில் காணப்படுகிறதா?? மற்றும் வீடியோ காட்சிகளில் பாடல்களை பிற இசைகளை உட்படுத்துவதை தயவுசெய்து தவிக்க முயற்சிக்கவும்.. நல்லைக் கந்தன் பக்தர்களின் குரல் மற்றும் அங்கு வாசிக்கப்படும் வாத்தியங்கள் இயற்கையான நிலமையில் நல்லைக்கந்தன் சந்நிதியில் இருந்து உற்சவம் பார்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.. நீங்கள் பாடல்களை இணைப்பது வீடியோ கட்சிக்கு நன்றாக இருக்கும் ஆனல் பக்தர்களுக்கு ஒரிஞ்னல் வீடியோ காட்சியைப் பார்பது போன்று அமையாது..!!! பாடல்களை இணைக்காமல் நல்லைக் கந்தன் சுற்றாடல் ஒலியுடன் காட்சிகளை வெளியிட்டீர்கள் ஆனால் எம்மை நல்லைக்கந்தனிடம் அழைத்து சென்ற ஊடகம்போல் நல்லூரன் இணையத்தளம் அமையும்…. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்… உலக இணைய வளர்ச்சியில் நாங்கள் நல்லூரான் தளத்தில் நல்லைக்கந்தனின் உற்சவத்தை நேரடியாகா காணும் காலம் தொலைவில் இல்லை..!!
மிக்க நன்றிகள்.