14.08.2011 Nallur News

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கர வருடத்திற்கான வருடாந்த மகா உற்சவத்தின் 11ம் நாள் ஆகிய இன்று.
வைகரை இருள் நீங்கி ஆதவன் உதயமாகும் அதிகாலை 4.30 மணிக்கு எம்பெருமானின் திருப்பள்ளி எழுச்சி பூசையுடன் வழமையான பூசையுடன் யாவும் சிறப்புடன் இடம்பெற்றன.
பத்த அடியார்கள் எம்பெருமனிற்கு தமது நேர்த்திக் கடன்களைத் தீர்க்கும் முகமாக அங்கப்பிரதிட்டை, அடியளித்தல், போன்றவற்றை அதிகாலை முதல் நிறைவேற்றி வந்தனர்.
இவ்வாறு காலை 10.00 மணிப் பூசை சிறப்புடன் நடைபெற்றதை; தொடர்ந்து. 10.15 மணிக்கு ஆலய மணியோசை எங்கும் ஒலிக்க வசந்தமண்டப வாயிலின் அழகிய திரைகள் விலகின. மங்கள வாத்தியங்கள் மங்கள இசை ஒலிக்க அந்தணர் தீபாராதணை செய்ய வேல், வள்ளி தெய்வானை சமேதராய் அடியவர்களிற்கு அருட்காட்சி தந்தார். தேவாரத்திருபதிகத்துடன் வசந்தமண்டப பூசை இனிதே நிறைவடைய அடுத்து கொடிக்கம்ப பூசை வழமை போல் நிறைவுற்றது..
வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி தெய்வானை சமேதராக அந்தனர்கள் தோல் மேல் புறப்பட்டு ஆலய முன் வாயிலை அடைந்து அழகிய பட்டடை அணிந்து பச்சை வர்ணக் குடைகளுடன் வெள்ளி மயில், வெள்ளி அன்ன வாகனத்தின் மேல் வீற்று உள் வீதி வலம் வந்து யாகசாலையை அடைந்து யாகம் முடிவுற்றதும் மீண்டும் முன் வாயிலை அடைந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். 12.00 மணி உச்சிகாலப் பூசையுடன் காலைப் பூசைகள் வழிபாடுகள் நிறைவுற்றது.
மாலை பூசை வழிபாடுகள் நிறைவுற 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் அரம்பமாகின. மேளங்கள் நாதேஸ்வரங்கள் நாதங்களை ஒலிக்க ஆலய மணி எங்கும் ஒலிக்க் தீபாரதனையில் வேல், வள்ளி தெய்வானை அடியவர்களிற்கு அருட்காட்சி தந்தானர் வெகுசிறப்புடன் வசந்தமண்டபபூசை நிறைவுற அடுத்து கொடிகம்பம் பூசை வழிபாடுகள் சிறப்புற நிறைவடைய வேல், வள்ளி தெய்வானை சமேதரார் அந்தனர் தோல் மேல் அமர்ந்து  வந்து வசந்தமண்டபத்தின் முன் இருந்த பச்சை மயில் மஞ்சல் அன்ன வாகனங்களில் தனித்தனியே அருட்காட்சி அளித்தனர். மென்சிவப்பு வர்ணப்படாடையுடன் மென்சிவப்பு வர்ண குடைகளுடன் எழுந்தருளி அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள் வீதி வலம் வந்து 5.30 மணியளவில் யாக பூசை வழிபாடுகள் நிறைவுற்று  பிரதான வாயிலைக் கடந்து தீபாரதனை செய்யப்பட்டடு வெளி வீதி வலம் வந்து எம்பெருமான் பிரதான வாயிலை மீண்டும் வந்து தீபாரதனை செய்யப்பட்டடு வாகனங்களில் இருந்து இறங்கி அந்தனர்கள் தோல் மேல் வசந்தமண்டபத்தை அடைந்தனர். அங்கு பஞ்சாலாத்தி தீபாரதனiயுடன் மக்கள் கூட்டம் ஆலயத்ததை விட்டு வெளியேறத் தொடங்கினர். 6.45மணி அர்த்தசாமப் பூசையுடன் பல பத்தர்கள் கலந்து கொண்ட 11ம் திருவிழா இனிதே நிறைவுற்றது.
கந்தனின் அடியவர்களிற்கு அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.காலை மதியம் மாலை என மூன்று  வேளையும் தண்ணீர்ப்பந்தல்களில் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.  மாலை ஆலய சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

Leave a Reply