வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீ நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று. அதிகாலை 4.30 மணி திருப்பள்ளி எழுச்சிப் பூசைஅடுத்து அதிகாலை 5.00 மணி பூசை பின் 10.00 மணிப் பூசை யாவும் திருவிழாக்கால சிறப்புடன் பல முருகனடியார்கள் ஆலயத்தில் கூடிநிற்க பத்தி பரவத்துடன் இடம்பெற்றது.
தவில் நாதஸ்வர இன்னிசை மழை முழங்க ஆலய மணி ஓசை எட்டுத்திக்கும் ஒலிக்க பகல் 10.15 மணிக்கு ஆலயத்தினுள்ளே எம்பெருமானின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு ஆலய பிரதம சிவாச்சாரியார் அவர்களால் பூசை வழிபாடுகளை சிறப்புற செய்யப்பட்டது.தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்றதை அடுத்து வேல் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்திலும் வீற்று நாவல் நிறப் பட்டாடை அணிந்து நாவல் நிறக் குடையின் கீழ் சிவப்பு மஞ்சள் நிற மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டு அழகுற எழுந்தருளி வந்து வேண்டி வந்த அடியவர்க்கு வேண்டும் வரமளித்து உள் வீதி முழுவதும் அருட்காட்சி கொடுத்து வசந்த மண்டபத்தை அடைந்தனர்.மதியம் 12.00 மணிப் பூசையுடன் ஆலயத்தில் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது.
கந்தனின் அடியவர்களிற்கு அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.காலை மதியம் மாலை என மூன்று வேளையும் தண்ணீர்ப்பந்தல்களில் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.
மாலை பல முருகனடியார்கள் ஆலயத்தில் கூடிநிற்க 4.00 மணி,4.15 மணி பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றதை அடுத்து தவில் நாதஸ்வர இன்னிசை மழைக்கு மனதை நனைக்க 4.30 மணிக்கு ஆலய மணி எங்கும் ஒலிக்க வசந்த மண்டபத்தில் எழுந்தருளித் தெய்வங்களாக வீற்றிருந்த வேல்,வள்ளி தெய்வானை சமேதரருக்கு தீபராதனைகள் வழிபாடுகள் சிறப்புற இடம்பெற்று கொடித்தம்ப பூசையும் சிறப்புற இடம்பெற்றது. 5.00 மணியளவில் எழுந்தருளித் தெய்வங்களான வேல்,வள்ளி தெய்வானை சிவப்பு ஆட்டுக்கடா வாகனங்களில் அழகிய சிவப்பு நிறப்பட்டாடை அணிந்து சிவப்பு நிறக்குடைகளுடன் பல வர்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள் வீதி வலம் வந்து 5.45 அளவில் வெளி வீதி வந்தடைந்து அடியவர்களை பத்திப் பரவசத்தில் ஆழ்த்தி 6.30 மணியளவில் ஆலயத்திற்குள் சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனார். 6.45 மணி அர்த்தயாம பூசையுடன் 6ம் நாள் திருவிழா இனிதே நிறைவுற்றது.
ஆலயத்தை சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாளை காலை 10.15 மணிக்கு காலை வசந்தமண்டப பூசையும் மாலை 4.30 மணிக்கு மாலை வசந்தமண்டப பூசையும் இடம்பெறும்.
அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன நவதள ஸ்ரீ சண்முக ராஐகோபுரம் ஸ்ரீ சண்முகப்பெருமான் ஸ்வர்ண வாசல் தரிசனம் நவகலசாபிஷேகம் 21.08.2011 ஞாயிறு கார்த்திகை உற்சவ தினம் –காலை 6.00 மணி முதல் இடம் பெறும் என நல்லூரன் இணையம் அனைவருக்கும் அறிவிக்கிறது.