07.08.2011 Nallur News

அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் ஆதிமூலத்ததை வந்தடைந்த எம்பெருமான் அடுத்த 5 மணிப் பூசை இனிதே பல பத்தர்கள் முன்னிலையில் ஆலய சிவாச்சாரியர்களால் வழமை போல் நடைபெற்றது.அதிகாலை முதல் நல்லூர் கந்தனை நோக்கி பல பக்தர்கள் வந்துகொண்டிருந்தனர். அதிகாலை முதல் அங்கப்பிரதிஸ்டை மற்றும் அடியளித்தல் போன்ற தமது நேத்திக் கடன்களை முருக பத்தர்கள் நிறைவேற்றி வந்தனர்.காலை 10.00 மணி பூசை முருகனிற்கும் மற்றத் தெய்வங்களிற்கும்  இனிதே  நிறைவடைந்ததும் . 10.15 க்கு வசந்த மண்டப பூசை வழிபாடுகள் மிகச் சிறப்புடன்  மங்கள வாத்தியங்கள் முழங்க வழமை போல் கொடிக்கம்ப பூசை வழிபாடுகள் இனிதே நடைபெற்றன. எம்பெருமான் மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னவாகனத்திலும்  மஞ்சல் நிற பட்டாடை அணிந்து சிவப்பு, மஞ்சல்,வெள்ளை நிற அழகிய பூ மாலை அலங்காரத்தில் மஞ்சல் குடைகளுடன் உள் வீதி வலம் வந்து அடியார்‌களை மெய்மறக்க செய்து தன் இருப்பிடத்ததை அடைந்தனர்.மதிய 12.00 மணி பூசை  வழமை போல் இடம்பெற்றது.
ஆலயத்தை சூலவுள்ள  அன்னதான மடங்களில் முருக அடியார்களிற் ‌அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது. அதிகாலையும் மதியமும் ஆலயத்தை சூலவுள்ள தண்ணீர் பந்தல்களில் தண்ணீர்தாகம் தீர்க்கப்பட்டது.
மாலை 4.00,4.15 மணிக்கு பல பத்தர்கள் சூழ்ந்திருக்க வழமை போல் நடைபெற்றதை அடுத்து 4.30 மணிக்கு வசந்த மண்டப பூசை வழிபாடுகள் இடம் பெற்று கொடிக்கம்ப பூசை வழிபாடுகள் நிறைவடைய வசந்த மண்டபத்தில் இருந்து 5.00 மணிஅளவில்  வேல் வள்ளி தெய்வானை சமேதரராக எம் பெருமான் இளஞ்சிவப்பு நிற பட்டாடை  அணிந்து  பச்சை மயில் வாகனத்தில் இளஞ்சிவப்பு குடைகளுடன் எழுந்தருளி உள்வீதி ‌வலம் வந்து 5.45 மணிக்கு முன் வாசல் கடந்து வெளி வீதி சுற்றி வந்து அடியார்களிற்கு வேண்டும் வரமளித்து அடியவர்களின் மனம் நிறைத்து சென்றனர்.மாலை 6.45 மணி பூசை வழிபாடுகள் நிறைவடைய எம்பெருமான் 2ம் நாள் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
ஆலயத்தை சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாளை காலை 10.15 மணிக்கு காலை வசந்தமண்டப பூசையும் மாலை 4.30 மணிக்கு மாலை வசந்தமண்டப பூசையும் இடம்பெறும்.

Leave a Reply