nallur 04.08.2011 news

பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் அதிகாலை முதல் நல்லூர் கந்தனை நோக்கி வந்த வண்னம் இருந்தனர். பலர்  அதிகாலையிலே‌யே அங்கப்பிரதிஸ்டை மற்றும் அடியளித்தல் போன்ற தமது நேத்திக் கடன்களை நிறைவேற்றி வந்தனர்.அதிகாலை பூ‌சை வழிபாடுகள் வழமை போல் இடம்பெற வழமையாக இடம்பெரும்  10.00 மணி பூசை காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது . 8.15 வசந்த மண்டப பூசை வழிபாடுகள் இடம் பெற்று பின் வழமை போல் வழிபாடுகள் அனைத்தும் இடம் பெற்றதை அடுத்து.9.30 மணியளவி்ல் எம்பெருமான் மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னவாகனத்திலும் விநாயக பெருமான் எலி வாகனத்திலும் சிவப்பு நிற பட்டாடை அணிந்து சிவப்பு நிற அலங்காரத்தில் கொடிக்கம்பத்தின்  முன் வந்தடைந்தனர்.
10.00 மணியளவில் அந்ணர்களின் வேத ஒலி எங்கும் ஒலிக்க மங்கள வாத்தியகள் மங்கள மழை பொழிய கூடியிருந்த பல்லாரக்கணக்காண முருக அடியார்களின் அரோகர சத்தம் விண்னைத் தொட ஸ்ரீ நல்லூர் கந்த சுவாமி கோயிலின் கர வருடத்திற்கான மாகோற்சம் கொடி  ஏற்றத்துடன் இனிதே ஆரம்பமானது. இதைத் தொடர்ந்தும் பல பக்த அடியார்கள் வெய்யிலையும் பொடுட்படுத்தாது அங்கப்பிரதிஸ்டை மற்றும் அடியளித்தல் போன்ற தமது நேத்திக் கடன்களை நிறைவேற்றினர். இன்னும் பலர் நல்லூர் கந்த சுவாமி கோவில் வீதியை வலம் வந்து முருகனை மனமுருகி வணங்கினர். மதிய 12.00 மணி பூசை  வழமை போல் இடம்பெற்றது.
ஆலயத்தை சூலவுள்ள  அன்னதான மடங்களில் முருக அடியார்களிற் ‌அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது. அதிகாலையும் மதியமும் ஆலயத்தை சூலவுள்ள தண்ணீர் பந்தல்களில் தண்ணீர்தாகம் தீர்க்கப்பட்டது. மேலும் பல நிகழ்வுகள் ஆலய சுற்றாடலில்  இடம்பெற்றது.
மாலை 4.00,4.15 மணிக்கு வழமையான பூசை வழிபாடுகள் இடம் பெற்றதை அடுத்து 4.30 மணிக்கு வசந்த மண்டப பூசை வழிபாடுகள் இடம் பெற்று கொடிக்கம்ப பூசை வழிபாடுகள் நிறைவடைய வசந்த மண்டபத்தில் இருந்து வேல் வள்ளி தெய்வானை சமேதரராக எம் பெருமான் பச்சை நிற படாடை  அணிந்து பச்சை நிற அலங்காரத்தில் எழுந்தருளி உள்வீதி ‌வெளி வீதி வலம் வந்து அடியார்களிற்கு வேண்டும் வரமளித்து சென்றனர்.மாலை 7.30 மணி பூசை வழிபாடுகள் நிறைவடைய எம்பெருமான் 1ம் நாள் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
ஆலயத்தை சுற்றாடல்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.ஆலயத்தை சூழவுள்ள தண்ணீர் பந்தல்களில் மாலையும் தண்ணீர் தாகம் தீர்க்கப்பட்டது.
நாளை காலை 10.15 மணிக்கு காலை வசந்தமண்டப பூசையும் மாலை 4.30 மணிக்கு மாலை வசந்தமண்டப பூசையும் இடம்பெறும்.

6 Responsesto “nallur 04.08.2011 news”

  1. shadadcharan ( norway) says:

    thaks

  2. SHANMUGADOSS says:

    Thank You…

  3. Somasundaram(irupalai) says:

    Thank you for the information

  4. Sundaralingam (Kalviyangadu) says:

    Migavum Nantri..

  5. kumar.vignerajahiyer says:

    what great service you are doing ,a

    thank you

  6. paris suba says:

    நன்றி வாழ்க தமிழ்…….

Leave a Reply