இன்று காலை வழமை 8.30 மணியளவில் கொடிச்சீலைக்கான பூசை ஆரம்பிக்கப்பட்டு.கொடிச்சீலை சட்டநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள கொடித் தேர் மடம் வேல் முருகன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு. 9.00 மணியளவில் திருவூர்தியில் கொடிச்சீலை ஏற்றப்பட்டு பூசை,வழிபாடுகள் இடம்பெற்று. 9.15 மணியளவில் அழகிய தேரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு. பருத்தித்துறை வீதி வழியாக உற்சவத்திற்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தகளினைத் தாண்டி நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிற்கு கொடிச்சீலை கொண்டு வரப்பட்டு பூசை,வழிபாடுகள் வழமைபோல் இடம்பெற்றது.
இன்று மாலை 6.15 மணியளவில் வைரவருக்கான வசந்த மண்டப பூசை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு. பூசை,வழிபாடுகள் வழமைபோல் இடம்பெற்றது. 6.30 மணியளவில் தெற்கு வாசலில் காட்சி அளித்து உள் வீதி வலம் வந்து வைரவபெருமான் 6.40 அளவில் வைரவர் வாசலிற்கு அருகிலிருந்த வாசல் ஊடாக காட்சி அளித்து பின் 6.45 அளவில் பிரதான வாயிலைக் கடந்து வெளி வீதியில் 6.50 அளவில் தெற்கு வாசலின் மேல் சேவற் கொடிகள் பறக்க விடப்பட்டன. பின் ஸ்ரீ சண்முக ராஐகோபுரத்தைக் கடந்து வெளி வீதி வலம் வந்து 7.05 மணியளவில் பிரதான வாசற் கோபுரத்தின் முன் வைரவ பெருமான் நிற்க பிரதான வாசற் கோபுரத்தின் மேல் வேலுடன் கூடிய சேவற் கொடி பறக்க விடப்பட்டு. முன் மண்டபத்தின் மேலும் சேவற் கொடி பறக்க விடப்பட்டது. 7.15 வைரவ பெருமான் தன் இருப்பிடத்தை அடைந்தார். மேலும் இன்று வைரவ பெருமானின் முன் ”அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன நவதள ஸ்ரீ சண்முக ராஐகோபுரம் ஸ்ரீ சண்முகப்பெருமான் ஸ்வர்ண வாசல் தரிசனம் நவகலசாபிஷேகம் 21.08.2011 ஞாயிறு கார்த்திகை உற்சவ தினம் –காலை 6.00 மணி முதல் சுபம்” எனும் பாதகை ஒன்றும் வலம் வந்ததையும் காண முடிந்தது.இது வழமையை விட சிறப்பு அம்சமாகும்.
இந்த வருட விடியோக் காட்சிகளையும் முடியுமென்றால் பிரசுரிக்குமாறு மிகப்பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இம்முறை வீடியோக் காட்சிகளை வெளியிடுவற்கு வெளிநாட்டு நல்லூரான் இணைய நண்பர் ஒருவரின் பண உதவியுடன் வெளியிட முயற்சிக்கிறோம்.
i am very happy to see the photo’s & video, i would like to see more video, thanks for your help, good luck.
Thanks