Posted by
admin on Nov 8, 2010 in
News |
2 comments
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் 2010 ம் ஆண்டு ஸ்கந்தசஷ்டி விரத உற்சவம் மூன்றாம் நாள் (08.11.2010)
இன்று வழமையான அதிகாலைப் பூசை வழிபாடுகள் நிறைவடைய 10 மணிப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து 10.15 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் இனிதே நிறைவடைய முத்துக்குமார சுவாமி இடப வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களிற்கு அருள் காட்சியளித்து உள்வீதி வலம் வந்து அருள்ளித்தார்.
மாலை பூசை வழிபாடுகள் இனிதே நிறைவடைய 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி இடப வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வெளிவீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள் புரிந்தார்.
இன்று பல பத்தர்கள் எம்பெருமானின் வரம் வேண்டி ஸ்கந்தசஷ்டி விரத்தை அனுஷ்ரித்ததை காணமுடிந்தது.
இன்று நல்லூர் ஆலய வீதிகளில் முன் வாகனத்தடைகள் வைக்கப்பட்டதால் வாகனங்கள் விழா நேரங்களில் வீதிகளில் வாகனங்கள் காணப்படவில்லை. மழையினால் சேதமடைந்த வீதிகள் இன்று திருத்தப்பட்டன.
இம்முறை எமது ஸ்கந்தசஷ்டி வீடியோ காட்சி சேவைகள் மழை காரணமாகவும் தவிர்க முடியாத காரணங்களாலும் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தடன் தெரிவித்தக் கொள்கின்றோம். எனினும் 2010 வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் வீடியோ காட்சிகள் இவ் வருட இறுதிக்குள் எமது இனையத்தில் பிரசுரமாகும்
40002 பேர்தான் உங்களுடைய பக்கத்தை பார்வையிட்டுள்ளனர் 7.40மணி 9.12.2011ஆம் திகதி வரையுள்ள முடிவு.
2009இல் எமது இணையம் வேற ஓர் server இல் வேறு விதமான பக்கவடிவமைப்பில் இருந்த போது மிகுதிப் பேர் பார்த்துள்ளனர்.