வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழாவின் பத்தொன்பதாம் நாள் இன்றாகும்.(02.09.2010).
அதிகாலை முதல் பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அங்கப்பிரதிட்டை, மற்றும் அடியளித்தல் செய்து முருகனை வழிபட்டு வந்தனர். காலை பூசை வழிபாடுகள் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
எம் பெருமானிற்கு 10 மணி பூசை வழிபாடுகள் இடம் பெற்ற பின் 10.15மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் மற்றும் கொடித்தம்ப பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி, தெய்வானை சமேதராக மயில்,அன்ன வாகனங்களில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள் புரிந்தனர்.
அன்னதான மடங்களில் அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது அதிகாலை முதல் தண்ணீர்ப்பந்தல்களில் தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
மாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகளும், கொடித்தம்ப பூசை வழிபாடுகளும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றன. வசந்தமண்டபத்தில் இருந்து வேல் தங்கமயில் வாகனத்திலும் வள்ளி, தெய்வானை பச்சைமயில் வாகனங்களிலும் அழகுடன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அருங்காட்சியளித்து பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி வெளிவீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் பாலித்தார்கள். ( படங்களைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்)
இன்று மாலை உள்வீதியில் அந்தணர்களின் மந்திரபாரயணத்துடன்எம்பெருமான் வலம் வந்தமை சிறப்பான நிகழ்வாகும்.
மாலையும் தண்ணீர்ப்பந்தல்களில் குளிர்பானம் வழங்கி தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
ஆலயத்தின் வெளிபுறங்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
மகோற்சவ காலங்களில் தற்பொழுது நல்லூரில் காலையிலும் மாலையிலும் மூலஸ்தான முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறதா? அப்படியாயின் எத்தனை மணிக்கு அபிஷேகங்கள் நடைபெறும் என்பதை தயவு செய்து அறியத்தாருங்கள்.