வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழாவின் பதினெட்டாம் நாள் இன்றாகும்.(01.09.2010).
அதிகாலை முதல் பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அங்கப்பிரதிட்டை, மற்றும் அடியளித்தல் செய்து முருகனை வழிபட்டு வந்தனர். காலை பூசை வழிபாடுகள் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
எம் பெருமானிற்கு 10 மணி பூசை வழிபாடுகள் சிறப்புற இடம் பெற்று தொடர்ந்து 10.15மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் மற்றும் கொடித்தம்ப பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி, தெய்வானை சமேதராக மயில்,அன்ன வாகனங்களில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள் புரிந்தனர்.
அன்னதான மடங்களில் அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது அதிகாலை முதல் தண்ணீர்ப்பந்தல்களில் தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
மாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகளும், கொடித்தம்ப பூசை வழிபாடுகளும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றன. வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி, தெய்வானை சமேதராக அழகுடன் இடும்பன் இடும்பி வாகனங்களில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அருங்காட்சியளித்து பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி வெளிவீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் பாலித்தார்கள். ( படங்களைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்)
இன்று மாலை உள்வீதியில் பேரிகை, சலங்கை ஒலி முழங்க ஆலயத்தொண்டர்களின் நடனத்துடன் எம்பெருமான் வலம் வந்தமை சிறப்பான நிகழ்வாகும்.
மாலையும் தண்ணீர்ப்பந்தல்களில் குளிர்பானம் வழங்கி தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
ஆலயத்தின் வெளிப்புறங்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
what a beautiful scene that murugan sitting on the idumpan vaahanam, and valli and theivvanajagi on smaller version. murugan’s lines of symmetry is adding devotional value and his look. did we miss anything by not coming there in person due to thudakku? no. kumaran’s family from london
hi wats your myspace page