17ம் திருவிழா (கார்த்திகை) 31.08.2010 செய்தி

17ம் திருவிழா (கார்த்திகை) 31.08.2010 செய்தி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழாவின் பதினேழாம்  நாள் இன்றாகும்.(31.08.2010).

22இன்று கார்த்திகை திருவிழா என்பதால் அதிகாலை முதல் பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அங்கப்பிரதிட்டை, மற்றும் அடியளித்தல் செய்து முருகனை வழிபட்டு வந்தனர். அதிகளவான பக்தர்கள் ஆலயம் எங்கும் நிறைந்திருந்தனர். காலை பூசை வழிபாடுகள் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. இன்று முருகனின் பிறந்த நட்சத்திரம் கார்த்திகையை நினைவு கூறும் நிகழ்வாக கார்த்திகைத் திருவிழா நடைபெற்றது. பல பக்தர்கள் காவடிகள் எடுத்து முருகனை வழிபட்டு வந்தனர்.

10 மணி பூசை வழிபாடுகள் எம் பெருமானிற்கு சிறப்புற  இடம் பெற்று காலை 10.15மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் மற்றும் கொடித்தம்ப பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று. வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி, தெய்வானை சமேதராக பச்சை மயில் வாகனத்தில் மஞ்சள் நிறத்திலான அலங்காரத்துடன்  எழுந்தருளி அருங்காட்சியளித்து உள்வீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள் புரிந்தனர். ( படங்களைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்) உள்வீதி வலம் வரும் வேளை புதிதாக அமைக்கப்பட்டு வரும் இராஐகோபுரத்திற்கு இயந்திரத்தகடு வைக்கும் நிகழ்வும் ஆறு கார்த்திகை தீபம் ஏற்றி கேணியில் விடும் நிகழ்வும் சிறப்புற இடம் பெற்றன. இதனை பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

அன்னதான மடங்களில் அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது அதிகாலை முதல் தண்ணீர்ப்பந்தல்களில் தாகசாந்தி தீர்க்கப்பட்டது.

பெருந்திரளான பக்தர்கள் ஆலயம் எங்கும் நிறைந்திருக்க மாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகளும், கொடித்தம்ப பூசை வழிபாடுகளும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது. வசந்தமண்டபத்தில் இருந்து முத்துக்குமாரர், வள்ளி, தெய்வானை சமேதராக அழகுடன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அருங்காட்சியளித்து பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி பின் பூஞ்சப்பரத்தில் ஏறி வெளிவீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் பாலித்தார்கள். இன்று பல தவில், நாதேஸ்வர வாத்திய இன்னிசை மழை பொழிய எம்பெருமான் வீதி வலம் வந்தார். வழமையை விட சற்று அதிக நேரம்  முருகப்பெருமான் வீதி வலம் வந்தார். ( படங்களைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்)

இன்று இரவு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருவிழாவில் நடைபெறுவது போல் உள்வீதியில் இசை அர்ச்சனை சிறப்பாக நிகழ்ந்தது.

மாலையும் தண்ணீர்ப்பந்தல்களில் குளிர்பானம் வழங்கி தாகசாந்தி தீர்க்கப்பட்டது.

ஆலயத்தின் வெளிபுறங்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழாவின் கார்த்திகை திருவிழா பெருந்திரளான பக்தர்கள் மத்தியில் சிறப்புடன் நடைபெற்றது.

2 Responsesto “17ம் திருவிழா (கார்த்திகை) 31.08.2010 செய்தி”

  1. உள்வீதி வலம் வரும் வேளை புதிதாக அமைக்கப்பட்டு வரும் இராஐகோபுரத்திற்கு இயந்திரத்தகடு வைக்கும் நிகழ்வினதும் ஆறு கார்த்திகை தீபம் ஏற்றி கேணியில் விடும் நிகழ்வினதும் படங்கள் கிடைக்கவில்லையா?

  2. Murugan says:

    ஆம். கிடைக்கவில்லையா

Leave a Reply