வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தன் பெருந்திருவிழாவின் பதினாறாம் நாள் இன்றாகும்.(30.08.2010).
வழமை போல் அதிகாலை முதல் பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அங்கப் பிரதிட்டை, மற்றும் அடியளித்தல் செய்து முருகனை வழிபட்டு வந்தனர். காலை பூசை வழிபாடுகளை பெருந்திரளான பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
10 மணி பூசை வழிபாடுகள் எம்பெருமானிற்கு சிறப்புற இடம் பெற்று காலை 10.15மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் மற்றும் கொடித்தம்ப பூசை வழிபாடுகள் சிறப்புற நடைபெற்று.வசந்தமண்டபத்தில் இருந்து வேல் வள்ளி, தெய்வானை சமேதராக மயில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருங்காட்சியளித்து உள்வீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள் புரிந்தானர்.
அன்னதான மடங்களில் அன்னதானம் சிறப்புற வழங்கப்பட்டது அதிகாலை முதல் தண்ணீர்ப்பந்தல்களில் தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
மாலை பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து 4.30 மணிக்கு வசந்தமண்டப பூசை வழிபாடுகள் பெருந்திரளான பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றதை அடுத்து கொடித்தம்ப பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. வசந்தமண்டபத்தில் இருந்து வேல், அழகிய சிங்கவாகனத்திலும் வள்ளி, தெய்வானை யாழி வாகனங்களிலும் அழகுடன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அருள்காட்சியளித்து பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி பின் வெளிவீதி வலம் வந்து அடியவர்களிற்கு அருள்காட்சி கொடுத்து அருள் பாலித்தார்கள். இன்று மாலை ஒவ்வொறு ஆண்டும் நடைபெறுவது போல் உள்வீதி முழுவதும் புல்லாங்குழல் மிருதங்கம் இன்னிசை முழங்க சுவாமி வலம் வந்தது சிறப்பான நிகழ்வாகும். ( படங்களைப் பார்க்க இங்கே கிளிக்செய்யவும்)
மாலையும் தண்ணீர்ப்பந்தல்களில் குளிர்பானம் வழங்கி தாகசாந்தி தீர்க்கப்பட்டது.
ஆலயத்தின் வெளிபுறங்களில் பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒவ்வொறு ஆண்டும் நடைபெறுவது போல் உள்வீதி முழுவதும் புல்லாங்குழல் மிருதங்கம் இன்னிசை முழங்க சுவாமி வலம் வந்த நிகழ்வையும் படம்பிடித்திருந்தால் அதையும் எமக்குப் பார்க்க ஏற்பாடு செய்யலாமே!
இதனை எம்மால் படம்பிடிக்க முடியவில்லை
நன்றி
அன்புடன்,
Nalluran Web Team